Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகர் ட்ரப்பெஸ்ஸில், கத்தியைக் கொண்டிருந்த நபரொருவரி தனது தாயாரையும் சகோதரியையும் இன்று கொன்றதுடன் மூன்றாவது நபரொருவரை மோசமாகக் காயமடையச் செய்ததாக பிரெஞ்சு உள்நாட்டமைச்சின் தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.
தனது தாயையும் சகோதரியையும் வீதியில் கொலை செய்த குறித்த இளைஞர் வீடொன்றில் அடைக்கலம் தேடியிருந்து, பின்னர் வீட்டிலிருந்து பொலிஸாரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் தகவல் மூலமொன்று தெரிவித்தது.
இந்நிலையில், இத்தாக்குதலுக்கு உரிமை கோரும் அறிக்கையொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதகுழு வெளியிட்டிருந்தது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago