Freelancer / 2022 மார்ச் 02 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் இருந்து, 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சிறு மணிகளாக மாற்றி, அணிந்திருந்த 'பர்தா'வில் பொருத்தி கடத்திய பெண், சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில், டுபாயில் இருந்து வந்த பெண் பயணி அணிந்திருந்த பர்தாவில் இருந்த வெண்ணிற மணிகள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, பர்தாவை கழற்றி அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, 18.18 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை, வெள்ளை மணிகளாக மாற்றி, பர்தாவில் இணைத்திருப்பது உறுதியானது. இதையடுத்து, பர்தாவில் இருந்து தங்க மணிகள் சேகரிக்கும், 'வீடியோ'வையும் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago