Editorial / 2018 ஜூலை 18 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்டுவதற்கு அந்நாட்டு பிரதமர் மோடி, மற்றும் ஆளுங்கட்சியான பா.ஜ.கவின் தலைவரான அமித்ஷா ஆகியோரின் பதாதைகளை வைத்துள்ளனர்.
தற்போது கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிடத் தயாராகிவிட்டனர். இதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள விதைகளைப் பாதுகாக்கவும் பறவைகளை விரட்டவும் வைக்கோலால் பொம்மைகளைப் பயன்படுத்துவார்கள்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்ட விவசாயிகள் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அமித்ஷா, மோடி பதாதைகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago