2025 மே 16, வெள்ளிக்கிழமை

பற்கள் வரிசையை விழுங்கிய இளைஞர்

Ilango Bharathy   / 2023 மே 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக வெள்ளி  பற்கள் வரிசையை விழுங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான குறித்த  இளைஞர் தன் பற்கள் மீது 4.1  சென்றி மீற்றர் அளவுள்ள வெள்ளி பற்கள் வரிசையை மாட்டியிருந்தார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டபோது எதிர்பாராத விதமாக அதனை விழுங்கிவிட்டார்.

அந்த வெள்ளி பற்கள் வரிசை இளைஞரின் நுரையீரல் காற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற இளைஞருக்கு, எக்ஸ்-ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள், ப்ரோன்கோஸ்கோபி முறையில், சிறிய கேமரா பொருத்தப்பட்ட மெல்லிய கருவியை நுரையீரலின் காற்றுப்பாதைக்குள் விட்டு, வெள்ளி பற்கள் வரிசையை வெளியே எடுத்தனர்.

பின்னர் நுரையீரலில் ஏற்பட்ட சிறிய அளவிலான ரத்தக்கசிவை சலைன் மூலம் சரி செய்தும், சுவாசப்பாதையில் இறுகிய தசைகளை ஸ்டீராய்டு கொடுத்து சரிசெய்தும், இளைஞரை முழுமையாக குணமாக்கி வீட்டிற்கு அனுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .