2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் அவுஸ்திரேலியா

Freelancer   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலஸ்தீன அரசை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நேற்று அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடாவின் இதேபோன்ற அறிவிப்புகளுக்குப் பின்னர் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் அண்மைய நடவடிக்கை இதுவாகும்.

இரு நாடுகள் தீர்வு, காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச உந்துதலுக்கு பங்களிக்கும் வகையில், எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X