2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பலஸ்தீன அரசை அங்கிகரிக்கவுள்ள ஐக்கிய இராச்சியம்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 30 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஸாவிலுள்ள மோசமான நிலமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான குறிப்பிடத்தக்க படிமுறைகளை இஸ்ரேல் எடுக்கா விட்டால் செப்டெம்பரில் பலஸ்தீன அரசொன்றை ஐக்கிய இராச்சியம் அங்கிகரிக்குமென ஐக்கிய இராச்சியப் பிரதமர் கெய் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

தவிர, யுத்தநிறுத்தமொன்று, இரு தேசத் தீர்வை வழங்கும் நீண்ட கால தன்னிறைவு அமைதிக்கு உடன்படுதல், உதவிகளை ஐக்கிய நாடுகள் மீள ஆரம்பிக்க அனுமதித்தல் உள்ளடங்கலான ஏனைய நிபந்தனைகளையும் இஸ்ரேல் சந்திக்க வேண்டுமெனத் தெரிவித்த பிரதமர் ஸ்டாமர், அல்லது ஐக்கிய நாடுகளின் செப்டெம்பர் பொதுச் சபையில் ஐக்கிய இராச்சியம் நடவடிக்கை எடுக்குமெனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X