2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொலை

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலிய இராணுவத்தினரால் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது, பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் மூவர் காயமடைந்தனர் என, பலஸ்தீன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இஸ்‌ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையிலுள்ள கிராமமொன்றிலேயே, இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது, படையினர் மீது, சுமார் 50 பேர் கற்களை வீசியெறிந்தனர் எனவும், அதைத் தொடர்ந்தே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும், இஸ்ரேலியத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X