Ilango Bharathy / 2022 மார்ச் 06 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானிலுள்ள பள்ளிவாசலொன்றில் நேற்று முன்தினம் (04) பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 62 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் உள்ள ஷியா பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசலிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த பள்ளிவாசலுக்கு வந்த மர்ம நபர்கள் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தமது உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனையடுத்து இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு உலக நாடுகள் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
48 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago