Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசிய கிராமம் ஒன்றில், முதலை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தமையால், அதற்கு முதலையை பழி வாங்கும் நோக்கில், முதலை இனப்பெருக்க பண்ணையில் இருந்த சுமார் 292 முதலைகளை, உயிரிழந்த நபருடைய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
கிழக்கு இந்தோனேசியாவின் சொரொங் மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, 48 வயது நபர் ஒருவர், கால்நடைகளுக்கு புல் சேகரிப்பதற்காக முதலைப் பண்ணைக்குள் நுழைந்த சமயத்தில் அவர் முதலை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கானதாக இந்தோனேசிய இயற்கை வள பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் உதவுவதற்கு யாரும் இல்லாத நிலையில் அவர் முதலையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கோபமடைந்த கிராம மக்கள், அன்றைய தினமே பண்ணைக்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்து முதலைகளையும் கொலை செய்துள்ளனர்.

1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago