Editorial / 2018 மே 28 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உகண்டாவின் வடக்குப் பகுதியில், இரவு நேரத்தில் வெளிச்சமின்றிப் பயணித்த ட்ரக்டருடனும், பின்னர் ட்ரக் ஒன்றுடனும் பஸ் ஒன்று மோதியதில், 48 பேர் பலியாகினர் என, செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. எனினும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 என, பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை மீட்பதற்காக, மீட்புப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர் என, உகண்டாவின் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்ததோடு, விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்று வாகனங்களின் சாரதிகளும் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
விபத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் இரேன் நகசிட்டா, “உயிரிழந்தோரின் எண்ணிக்கை, இப்போது 48 எனக் காணப்படுகிறது. அவர்களில் 16 சிறுவர்களும் உள்ளடங்குவர்” எனத் தெரிவித்தார்.
உகண்டாவின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற, மிக மோசமான விபத்துகளுள் ஒன்றாக இது காணப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 220 கிலோமீற்றர்கள் தூரத்திலுள்ள கிரியான்டோங்கோ என்ற பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டது. உகண்டா நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு, இவ்விபத்து இடம்பெற்றது.
வெளிச்சமின்றிப் பயணித்துக் கொண்டிருந்த ட்ரக்டரின் பின்பக்கத்தில் முதலில் மோதிய பஸ், பின்னர், பியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ட்ரக்குடன் மோதியுள்ளது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025