Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் ஐந்து தாக்குதல் ஜெட்களையும், இன்னுமொரு இராணுவ விமானத்தையும் மே மாதம் இடம்பெற்ற மோதலில் இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இவ்வறிப்பை இந்தியாவின் விமானப்படைத் தளபதி அமர் பிறீட் சிங்கே சனிக்கிழமை (09) விடுத்துள்ளார்.
இன்னுமொரு பெரிய இராணுவ விமானமானது கண்காணிப்பு விமானமொன்றாக இருக்கலாமென்றும் 300 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து சுடப்பட்டதாக சிங் கூறியுள்ளார்.
இது தவிர இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளே பெரும்பாலான பாகிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சிங் குறிப்பிட்டுள்ளார். இதுவே வானிலிருந்து தரையிலான பாரிய தாக்குதலென்றும் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான தாக்குதல் ஜெட்கள் வீழ்த்தப்பட்டதாக சிங் குறிப்பிடாதபோதும் தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள இரண்டு விமானப்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு கண்காணிப்பு விமானத்தையும், சில எஃப்-16களையும் விமானத் தாக்குதல்கள் தாக்கியதாகக் கூறியுள்ளார்.
40 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago