Editorial / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரச்சினைக்குரிய காஷ்மிர் தொடர்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கையில், பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படும் காஷ்மிரின் பகுதி ஆனது இந்தியாவுக்குச் சொந்தமானது என நேற்று தெரிவித்துள்ள இந்தியாவின் வெளிநாட்டமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு நாள் அதன் கட்டுப்பாட்டை இந்தியா பெறும் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
மிகவும் சனத்தொகை மிக்க காஷ்மிர் பள்ளத்தாக்கை இந்தியா ஆட்சி செய்கின்ற நிலையில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மிர் என இந்தியா வர்ணிக்கும் குறித்த பிராந்தியத்தின் மேற்கிலுள்ள குறுகிய பகுதியொன்றை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிர் தொடர்பான தங்களது நிலை எப்போதும் மிகத் தெளிவாக இருப்பதாகத் தெரிவித்துள்ள சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிர் இந்தியாவின் பகுதி ஒரு நாள் அதில் பெளதிக ஆட்சியைத் தாங்கள் கொண்டிருப்போம் என தாங்கள் எதிர்பார்ப்பதாக செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில், சுப்ரமணியம் ஜெய்ஷங்கரின் கருத்துக்களை அறிக்கையொன்றில் பாகிஸ்தானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சாடியுள்ளது.
இந்தியாவுடன் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமது பகுதி காஷ்மிரை இணைக்கும் பொருட்டு, தமது பகுதிக்கான காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் இந்தியா நீக்கியிருந்த நிலையில், காஷ்மிர், பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்களும், கோபங்களும் வெளிப்பட்டிருந்தன.
இதேவேளை, காஷ்மிரின் சிறப்பு உரிமைகளைப் பெறப்படுவது உள்நாட்டு இந்திய விடயமென்று சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago