2026 மே 14, வியாழக்கிழமை

பாகிஸ்தானியர்களுக்கு உக்ரைனில் உதவிய இந்தியக் கொடி

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாது, பாகிஸ்தான் மற்றும் துருக்கியர்களுக்கும் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்குச் செல்ல இந்தியாவின் தேசிய மூவர்ணக்கொடி உதவியுள்ளது.

உக்ரைனில் இருந்து ருமேனியாவிலுள்ள புக்கரெஸ்ட் நகருக்கு வந்த இந்திய மாணவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் பல்வேறு சோதனைச் சாவடிகளை பாதுகாப்பாக கடக்க தேசிய மூவர்ணக்கொடி தங்களுக்கும் சில பாகிஸ்தான் மற்றும் துருக்கிய மாணவர்களுக்கும் உதவியது என்று தெரிவித்தனர்.

உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து ‘ஒபரேஷன் கங்கா’வின் கீழ் இயக்கப்படும் சிறப்பு வெளியேற்ற விமானங்களில் ஏறுவதற்கு இந்திய மாணவர்கள் ருமேனியா நகருக்கு வந்தனர். 

அங்கிருந்து, எயார் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ ஆகியவை சிறப்பு வெளியேற்ற விமானங்களை இயக்கிவருகின்றன.

இந்தியர்களாக இருப்பதாலும், இந்தியக் கொடியை ஏந்தியிருப்பதாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று உக்ரைனில் தெரிவிக்கப்ப்ட்டதாக தெற்கு உக்ரைனிலுள்ள ஒடேசாவில் இருந்து வந்த மருத்துவ மாணவர் ஒருவர் தெரிவித்திருந்தார். 

இந்தியக் கொடிகளைத் தயாரிப்பதற்காகச் சந்தைகளில் இருந்து ஸ்ப்ரே பெயிண்ட்களை வாங்கி இந்திய கொடிகளை தயாரித்ததாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

சில பாகிஸ்தான் மற்றும் துருக்கிய மாணவர்கள் கூட இந்தியக் கொடியைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .