2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் இணைய சேவையை நிறுத்துவதாக எச்சரிக்கை

Freelancer   / 2022 ஜூலை 02 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் அமலாகும் மின்வெட்டுக்கு மத்தியில், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், இணைய சேவைகளை நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நாடு முழுவதும் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அலைபேசி மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர் என்று தேசிய தகவல் தொழில்நுட்ப சபை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஜூலை மாதத்தில் அதிக சுமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு தேவையான திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்தை பெற முடியவில்லை என்றும், இருப்பினும் கூட்டணி அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை சாத்தியமாக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் மாதாந்த எரிபொருள் இறக்குமதி ஜூன் மாதத்தில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன என்றும் தேவையை அதிகரிக்கும் வெப்ப அலைக்கு மத்தியில் மின்சார உற்பத்திக்காக எல்என்ஜிஐ வாங்குவதற்கு நாடு போராடுகிறது என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் உடன்படத் தவறியதால், பாகிஸ்தான் மின் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

நாடு ஏற்கெனவே பரவலான மின்தடையைச் சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாலும் அதிக விலை மற்றும் குறைந்த பங்கேற்பு காரணமாகவும் ஜூலை மாதத்துக்கான விலைமனுக்கள் இரத்து செய்யப்பட்டன. 

பாகிஸ்தானின் அரசாங்கம் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்க முயற்சிப்பதுடன், அரச ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்துள்ளது மற்றும் கராச்சி உட்பட பல்வேறு நகரங்களில் தொழிற்சாலைகளுக்கு வணிக வளாகங்களை முன்கூட்டியே மூட உத்தரவிட்டுள்ளது.

2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் கட்டாருடன் இரண்டு நீண்ட கால விநியோக ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. 2016 ஒப்பந்தத்தில் மாதாந்தம் 5 இறக்குமதிகளையும் 2021 இல் மாதாந்தம் 3 இறக்குமதிகளையும் பெறுகிறது.

ஆனால் மின்சார உற்பத்திக்காக எல்என்ஜியை அதிகளவில் நம்பியிருப்பதால் குளிர்ந்த எரிபொருளின் கொள்முதல் நம்பகத்தன்மையற்றதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் நாடு தற்போது பரவலான மின்வெட்டுகளின் பிடியில் உள்ளது.
  
அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைந்து போனமை பாகிஸ்தானின் இரட்டைப் பற்றாக்குறையின் பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி வரத்து இல்லாததன் விளைவாகும்.

பாகிஸ்தானில் பணவீக்கம் ஜூலை மாதத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியது, இது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சி என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .