2026 மே 09, சனிக்கிழமை

பாகிஸ்தானில் பலியானோரை நினைவு கூரும் ஹசாராக்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள ஷியா ஹசாராக்கள், பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பலியானவர்களை வருடாந்தம் நினைவு கூர்வதாக கனடாவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் முதல் பயங்கரவாதத் தாக்குதல்
பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் நடந்ததுடன், அதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த வருடம் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதலில் பதினொரு சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் ஹசாராக்கள் ஷியா சிறுபான்மையினராக உள்ளதால், அங்குள்ள தீவிர சுன்னிகள் அவர்களை இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்று கருதுவதுடன், பல தசாப்தங்களாக அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். 

அதன் காரணத்தால், பாகிஸ்தானிலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் உள்ள ஹசாராக்கள், ஆண்டுதோறும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்கின்றனர்.

அவதூறு, பாகுபாடு, தாக்குதல் மற்றும் கொலைகளில் இருந்து தங்களைப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கவே, சமீபத்தில் இந்த சந்தர்ப்பத்தை ஹசராக்கள் பயன்படுத்தியதாக உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .