Mithuna / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் வியாழக்கிழமை (08) பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுகின்றது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது.
இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி பொலிஸார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பாதிஸ்தான் முழுவதும் இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தீவிரவாதச் செயல்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
9 minute ago
18 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
28 minute ago
2 hours ago