2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பாகிஸ்தான் வான்படை விமானம் வீழ்ந்தது; விமானிகள் இருவர் பலி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 23 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் வட மேற்கில் பயிற்சிப் பறப்பொன்றில் இருக்கும்போது அந்நாட்டு வான்படையின் பயிற்சி விமானமொன்று நேற்று வீழ்ந்ததில், அதிலிருந்த இரண்டு விமானிகள் கொல்லப்பட்டதாக வான் படையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

வழமையான பறப்பின்போது பெஷாவருக்கு அருகில் பயிற்சி விமானம் வீழ்ந்ததாக வான் படையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக விசாரணையொன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .