Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக தீவிர பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், தற்கொலைக்கு முயன்றதாக பேசியிருக்கிறார்.
உலக வல்லரசு நாடுகளில் மிகவும் முக்கிய நாடாக இருக்கிறது அமெரிக்கா. இங்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இந்த முறை போட்டியிடுகிறார்கள்.
தற்போது ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் அதிபராக ஆட்சி புரிந்து வருகிறார். இதற்கு முந்தைய ஆட்சியில் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் அதிக கவனம் கொண்ட தேர்தலாக அமைந்திருக்கிறது.
இன்னும் ஏழு மாதங்களில் அமெரிக்கா அதன் மிகப் பெரிய தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய இரண்டு வேட்பாளர்களும் பலத்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய விஷயங்களை சமீபத்தில் அவர் கலந்துக்கொண்ட பேட்டியில் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததையும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறியது அமெரிக்க மக்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோ பைடன் 1972 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையில் மோசமான ஆண்டு என விளக்கினர். தனது 30 வயதில் மனைவி மற்றும் மகளை கார் விபத்தில் இழந்ததாகவும் அதன்பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் இரு மகன்களையும் தனி ஆளாக நின்று வளர்த்தாகவும் பேசினார்.
ஜோ பைடன் மனைவி மற்றும் மகளின் இறப்பினால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அதன்படி அமெரிக்காவின் மிகவும் பிரபலமான டிலாவாரே பாலத்தின்மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தாராம்.
மது போதையில் பாலத்தின்மீது ஏறிய ஜோ பைடன் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் வீட்டில் இருக்கும் அவரது இரு மகன்களின் நினைவு வந்ததால் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய ஜோ பைடன், வாழ்க்கையில் எத்தனை சிரமங்கள் வந்தாலும் தற்கொலை எந்த ஒரு சிரமத்திற்கும் தீர்வாகாது என்றார்.
முதல் மனைவி இறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1975 ஜில் என்பவரை சந்தித்தார் பைடன். ஜில்லை சந்தித்தபோது ஜோ பைடனுக்கு 33 வயதாம். ஜில்லுக்கு 24 வயதாம். இருவரும் பழகி அது நாளடைவில் காதலாக மாறியதாகவும் கன்னம் சிவக்க பேசினார் பைடன். அந்த வகையில் 1977 ஜோ பைடன் ஜில்லை திருமணம் செய்து கொண்டார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்த பிறகு, தனக்கு எதிராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பிற்கு சவாலையும் விடுத்தார் பைடன். அப்போது பேசிய பைடன், டொனால்ட் டிரம்ப்புடன் விவாதிக்க தயாராக இருப்பதாக சவால் தொனியில் பேசினார். எங்கு எப்போது என சொல்லுங்கள் சவாலை எதிர்கொள்ளலாம் என பைடன் விடுத்த சவாலுக்கு பதிலளித்தார் டிரம்ப்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
59 minute ago
2 hours ago