Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட பிணை கைதிகளில் 6 பேரின் உடல்களை தெற்கு காசா பகுதியின் சுரங்கம் ஒன்றில் இருந்து மீட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டெல் அவில் நகரத்தில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர்.
ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணை கைதிகளை பிரதமர் நெதன்யாகு கைவிட்டு விட்டதாக கூறி அவர்கள் கோசம் எழுப்பினர். நெடுஞ்சாலைகளில் டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து ஆத்திரத்தை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள் பதாகைகள், கொடிகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
பேரணியை இஸ்ரேல் பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பதற்றம் பன்மடங்கு அதிகரித்தது.
இந்நிலையில், கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு அப்பகுதியே போர்க்களம் போல் மாறியது. சிதறி ஓடிய போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்து இழுத்து சென்றனர்.
இதனிடையே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாக்கு எதிரான போராட்டம் தொடரும் என பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளதால் டெல் அவில் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.s
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
47 minute ago
2 hours ago