Mithuna / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஒக்டோபர் மாதம் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர், தெற்கு இஸ்ரேல் பகுதியில் அதிரடியாக நுழைந்து பல இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவ படை , ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பலஸ்தீன காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி அழித்து வருகிறது.
130 நாட்களை கடந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனத்தில் 28,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பிணைக்கைதிகளை விட வேண்டுமானால் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு கெடு விதித்திருக்கிறது.
இஸ்ரேலி கேபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) இது குறித்து தெரிவித்ததாவது:
“மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் மாதம் தொடங்கும். ரம்ஜான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால், பலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசவுள்ளோம். இது தீவிரமான நடவடிக்கைதான்.
ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன – அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரம்ஜான் கொண்டாட முடியும். இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
12 minute ago
22 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
2 hours ago
3 hours ago