Editorial / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது தந்தையின் உயிரிழப்புக்கு காரணமான, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதை நினைத்து தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சியடையவில்லை என, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர், “எனது தந்தை 1991 கொலை செய்யப்பட்டார். எனது தந்தையைக் கொன்றவர், 2009இல் இலங்கையில் கொலை செய்யப்பட்டுகிடந்ததை நான் பார்த்தேன்.
நான் எனது சகோதரி பிரியங்காவை அலைபேசியில் அழைத்தபோது, “இது மிகவும் விசித்திரமானது, ஆனால் நான் மகிழ்ச்சியடையவில்லை. இறந்து கிடந்தவர் எனது தந்தையைக் கொன்றவர் என்ற அடிப்படையில், நான் கொண்டாட வேண்டும். ஆனால் நான் மகிழ்ச்சியடையவில்லை. ” என்று அவர் என்னிடம் கூறினார்.
இதற்கு நானும், மகிழ்ச்சியடையவில்லை என்றே அவரிடம் கூறினேன். அவரது குழந்தைகளின் நிலையில் இருந்து தான் நான் அவரை பார்த்தேன். அதனால் அவரின் இறப்பில் என்னால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.” எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago