Freelancer / 2022 ஜனவரி 30 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த சீனா தயாராக உள்ள நிலையில், சில வளி மாசுபடுத்திகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் வடக்கு சீனாவில், வானிலை நிலைமைகள் காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் லியூ யூபினை மேற்கோள் காட்டி சைனா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பீஜிங்-தியான்ஜின்-ஹெபேய் மாகாணங்களில் காற்றின் தரத்தில் பெரும் முன்னேற்றம் இருப்பதாக அரசாங்கம் கூறியிருந்த போதிலும், நிகழ்வுகளை நடத்துவதற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் லியூ தெரிவித்துள்ளார்.
கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டால், வளிமண்டல மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டத்தின்படி மேலும் அவசர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையாக மாசுபடுத்துபவர்கள் மற்றும் அதிக புகைகக்கும் வாகனங்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த தேவையான நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க பீஜிங், ஹெபேயின் உள்ளூர் அரசாங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சைனா டெய்லி தெரிவித்துள்ளது.
பீஜிங்கிலும், ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஷாங்ஜியாகோ நகரிலும் பிப்ரவரி 4 முதல் 20 வரையும் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், மார்ச் 4 முதல் 13 வரை பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago