2025 மே 05, திங்கட்கிழமை

பீஜிங்க். மண் சரிவில் 11 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 28 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும், கேமி புயலால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஹ{ஹான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஷங்காய் நகரில் மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X