2026 மே 09, சனிக்கிழமை

புடின் - மோடி திடீர் பேச்சுவார்த்தை; காரணம் என்ன?

Freelancer   / 2022 மார்ச் 03 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனில் இந்திய மாணவர்களின் அவலநிலை குறித்து புடின், மோடி ஆகியோர் அவசரமாக கலந்துரையாடியுள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அவசரமாக வெளியேற்றுவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆயுத மோதல் மண்டலத்திலிருந்து இந்திய நாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதிசெய்ய ரஷ்ய வீரர்களுக்கு உத்தரவிட்டதாக இதன்போது புடின், மோடியிடம் கூறினார்.

எனினும் குறித்த மோதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .