Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 02 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் நியூயோர்க் நகர குடியிருப்பு வாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது. சுமார் மூன்று நாட்களாக பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன.
நியூயோர்க் நகர சுரங்கப்பாதைகளிலும் இந்த பூச்சிகள் கூட்டம் ஊடுருவியுள்ளது. இது குறித்து சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், 'இந்தபூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவைக்னாட்ஸ் (gnats- ஒரு வகை கொசு) அல்ல' என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்று புகழ் பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கோரி மோரோ கூறியிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago