Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 28 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் சைலண்டாக ஒரு முக்கியமான மாற்றம் நடக்கிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பூமியில் புதிதாக ஒரு கடல் உருவாகும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். மூன்று டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் ஒரு வித அதிர்வுகள் ஏற்படுகிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போலவே ஏற்படுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உருகிய மாக்மா பூமியின் மேலோட்டை கீழே இருந்து தாக்குவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இது படிப்படியாகக் கண்டத்தைக் கிழித்து, ஒரு புதிய கடலை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
அஃபார் பிராந்தியம் மற்றும் மெயின் எத்தியோப்பியன் ரிஃப்ட் முழுவதும் இருந்து 130க்கும் மேற்பட்ட எரிமலை பாறை மாதிரிகளைச் சேகரித்த ஆய்வாளர்கள், அதை மற்ற தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதில் தான் இப்படி ஆப்பிரிக்காவுக்குக் கீழ் மிகப் பெரிய மாற்றம் நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
இப்படிக் கண்டம் பிளவுபடுவதால் ஒரு புதிய கடல் படுகை உருவாகும். அதேநேரம் இந்தப் பிளவு உடனடியாக ஏற்படாது. இவை மெல்ல மெல்ல ஏற்படும். இதனால் பல மில்லியன் ஆண்டுகளில் பிளவு முழுமையடைந்து கடற்பரப்பு விரிவடையும்.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் டெரெக் கெய்ர் மேலும் கூறுகையில், "இந்த மெண்டில் மேலே வருவதற்கும் பூமியின் பிளேட்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எரிமலை வெடிப்பு, பூகம்பம் மற்றும் கண்டம் உடையும் செயல்முறையைப் புரிந்து கொள்ள இது உதவும்" என்றார். இப்போது ஆய்வாளர்கள் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். R
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025