Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்தின் வைத்துக் கொல்லப்பட்டமை தொடர்பில், முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்வதாக, சவூதி அரேபியா உறுதியளித்துள்ளது என, ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மற்றிஸ் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் வைத்து, சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சர் அடெல் அல்-ஜுபெயர்ரை நேற்று முன்தினம் (28) சந்தித்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, மற்றிஸ் இவ்வாறு தெரிவித்தார். “வெளிப்படைத்தன்மைக்கான தேவை, முழுவதும் பூரணமானதுமான விசாரணை ஆகியவற்றுக்கான தேவைகள் குறித்து நாம் கலந்துரையாடினோம். வெளிநாட்டு அமைச்சர் ஜுபெய்ர், முழுமையாக ஏற்றுக்கொண்டார். எந்தப் பின்வாங்கலும் இருக்கவில்லை” என, மற்றிஸ் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது என்பது தொடர்பாக அறிவதற்கு, தாங்களும் விரும்புவதாக அவர் தெரிவித்தாரெனக் குறிப்பிட்ட மற்றிஸ், அவ்விடயத்தில் சிறந்த இணக்கப்பாடு காணப்பட்டது எனவும் தெரிவித்தார். அதேபோல், துருக்கியில் இடம்பெற்ற இக்கொலை தொடர்பான விசாரணைகளை, துருக்கி மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவ்விசாரணையில், துருக்கியின் பங்களிப்பையும், மற்றிஸ் அங்கிகரித்தார்.
57 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago