Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் 4 மாதத்தில் கணிசமாக குறைகின்றது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய புதிய ஆய்வில் கூறியிருப்பதாவது,
பைசர் மற்றும் மொடர்னா நிறுவன தடுப்பூசிகளின் 3-வது டோசின் செயல்திறன் 4-வது மாதத்தில் கணிசமாக குறைந்து விடுகிறது.
உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் பரவிய காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 3-வது டோசுக்கு பிறகு இரண்டு மாதங்களில் 87 சதவீதமாக இருந்தது.
ஆனால் 4-வது மாதத்தில் செயல் திறன் 66 சதவீதமாக குறைந்தது.
வைத்தியசாலையில் சேர்க்கப்படுவதற்கு எதிரான தடுப்பூசியின் செயல் திறன் முதல் 2 மாதங்களில் 91 சதவீதமாக இருந்தது.
ஆனால் 3-வது டோசுக்கு பிறகு 4-வது மாதத்தில் 78 சதவீதமாக குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
09 May 2026