2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பெட்டியால் பயணிகளுக்கு இடையே மோதல்

Ilango Bharathy   / 2023 மே 28 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

10க்கும் மேற்பட்ட பயணிகள் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம்கடந்த திங்கட்கிழமை  அமெரிக்காவின் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று காலை விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மூன்றாவது முனையத்தில் தங்களது  பயணப் பொதிகளை( லக்கேஜ்களை) எடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த  பயணிகளுக்கு  இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 24 வயதான  இளம்பெண்ணொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் விலக்கி விட்டதோடு இளம்பெண்ணைத்  தாக்கிய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .