Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொலிஸாரின் கண்காணிப்பு வாகன அணியான அம்மா பட்ரோ, இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தனது நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்துள்ளது.
குற்றம் நடைபெறும் இடத்தில் உடனடியாக பதிலளிப்பை வழங்கவும், சிறுமி மற்றும் பெண்களுக்கெதிரான எந்த வன்முறையைத் தடுக்கும் 40 கண்காணிப்பு வாகனங்களைக் கொண்ட குறித்த அம்மா பட்ரோலின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆரம்பித்து வைத்திருந்தார்.
அந்தவகையில், சென்னையில் குறைந்தது 40 வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன. தாங்கள் நிர்பயா நிதியின் கீழ் 6.8 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் 45 டொயோட்டா இனோவா கிறிஸ்டா 2.4ஜி வாகனங்களை தாங்கள் வாங்கியுள்ளதாகவும், அவசரநிலைக்கு பதிலளிக்கும் முகமாக மொத்தமாக 35 வாகனங்கள் பொலிஸ் நிலையங்களில் நிறுத்தப்படுமென அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
சென்னையில் 46 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வசிக்கின்ற நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான 2,108 வழக்குகளும், 43,022 முறைப்பாடுகளும் கடந்த மூன்றாண்டுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மர்றும் பெண்களுக்கான சிறப்புப் பிரிவின் உதவி பொலிஸ் ஆணயாளர் எச். ஜெயலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
17 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
04 Nov 2025