Editorial / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுடன் ஐக்கிய அமெரிக்காவும் தென்கொரியாவும் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில், மனித உரிமைகளைப் பற்றிய விடயங்கள் ஒதுக்கப்படுகின்றன என, ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர் ஒருவர், தனது திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, மியான்மாரில் நடைபெற்ற விடயங்களையும் அவர் ஞாபகப்படுத்தியுள்ளார்.
வடகொரியா தொடர்பான, ஐ.நாவின் விசேட அறிக்கையாளரான தோமஸ் ஒஜேயா குயின்டானோவே, இக்கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவர், 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, மியான்மார் தொடர்பான பொறுப்பை வகித்து வந்தார்.
மியான்மாரில், ஜனநாயக ரீதியான அம்சங்கள் ஏற்படத் தொடங்கிய போது, மியான்மாரில் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கவனத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அது தொடர்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில், முடிவொன்றை எடுப்பதற்கு, சர்வதேச நாடுகள் தவறியிருந்ததோடு, மியான்மாரின் ஜனநாயக நிலைமாற்றத்தை, அவை அங்கிகரித்திருந்தன.
அதன் பின்னரே, கடந்தாண்டில், ராக்கைனில் வைத்து, றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள், பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
அதை ஞாபகப்படுத்திய குயின்டானோ, வடகொரியாவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர், வடகொரியாவின் அணுவாயுதப் பயன்பாடு, ஏவுகணைச் சோதனை ஆகியன தொடர்பில் தங்களுக்குள் சந்திக்கின்ற போதிலும், இச்சந்திப்புகளில், மனித உரிமைகள் பற்றி ஆராயப்பட்டனவா எனத் தெரியவில்லை எனவும், இதன்போது அவர் குறிப்பிட்டார்.
6 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
31 minute ago