Freelancer / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அனைத்து அதிகாரமும் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.
கடந்த வருடம் 10.62 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும், 2020 ஆண்டின் தொகையான 12.02 மில்லியனை விட அது குறைந்துள்ளதாகவும் தேசிய புள்ளி விபரவியல் அலுவலக அறிக்கையின் மூலம் அறியமுடிகிறது.
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான எண்ணிக்கையாகவும் இத்தொகை உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் மக்கள்தொகை தற்போதைய 1.4 பில்லியனாக நிலைபெறும் என்று கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
எனினும், சீனப் பெண்கள் சராசரியாக 1.3 குழந்தைகளை மட்டுமே கொண்டுள்ள நிலையில், சீனா நிச்சயமாக மக்கள் தொகைக் குறைப்பில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தொட்டில்களை விட அதிகமான சவப்பெட்டிகளையே சீனா நிரப்புகிறது.
அதிகாரத்துவம், பயம் என்ற பொத்தானை அழுத்துகிறது என்பதற்கான அறிகுறிகள் எல்லா இடங்களிலும் உள்ளன.
பல தசாப்தங்களாக மகப்பேறுக்கு எதிரான பிரச்சாரமாக ஒரு குழந்தை கொள்கையை (சட்டவிரோதமான குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் உங்கள் வீட்டை இடிப்போம்) மீறினால் கடுமையான தண்டனையை என, அச்சுறுத்தியது.
குழந்தை பெற்றுக் கொள்வது என்பது “குடும்பப் பிரச்சினை மட்டுமல்ல, அரச விவகாரமும் கூட” என்று இப்போது பெண்களுக்குச் சொல்லப்படுகிறது.
ஆனால், திருமணம் மற்றும் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் கருக்கலைப்புகள் ஒரு வருடத்துக்கு 9 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் இடம்பெறுகின்றன என்பதோடு, பிறப்புக்கு சற்று குறைவாகவே உள்ளது.
சீனாவுக்கு மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள கருவுறுதல் விகிதங்கள் ஆபத்தான அளவில் குறைவாக உள்ளன என்று உலக வங்கி தெரிவிக்கிறது.
இறுதியாக இலக்கங்களைப் பார்த்துத் திகிலடைந்த சீனத் தலைமை, 2020 ஆம் ஆண்டில் மக்கள்தொகையின் முதுமைக்கு பதிலளிக்கும் வகையில் அமுல்படுத்திய "மூன்று குழந்தைகள் கொள்கை" வரப்போகும் சரிவை மாற்றுவதற்கு மிகவும் தாமதமாக வருகிறது.
20 minute ago
41 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
47 minute ago
52 minute ago