2025 நவம்பர் 05, புதன்கிழமை

பொலிஸ் தலைமையகம் மீதான தலிபானின் தாக்குதலில் 13 பேர் பலி

Editorial   / 2019 மே 06 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடிபொருள் உள்ள தனது காரை தற்கொலைக் குண்டுதாரியொருவர் வெடிக்க வைத்து குறைந்தது 13 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து வட ஆப்கானிஸ்தான் நகரமான புல்-ஈ-குஹும்ரியிலுள்ள பொலிஸ் தலைமையகமொன்றுக்குள் நுழைந்த தலிபான் ஆயுததாரிகளுக்கெதிரான மணித்தியாலக் கணக்காக ஆப்கானிஸ்தான் படைகள் சண்டையிட்டதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அலுவலகத்தின் வாயலில், தனது ஹம்வி வாகனத்தை தலிபான் ஆயுததொரியொருவர் வெடிக்க வைத்ததைத் தொடர்ந்து, இயந்திரத் துப்பாக்கிகள் தரித்த எட்டுத் தாக்குதலாளிகளைக் கொண்ட குழுவொன்று கட்டடத்துக்குள் புகுந்ததாக ஆப்கானிஸ்தானின் இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 பொலிஸார் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள உள்துறை அமைச்சின் பேச்சாளரொருவரான நஸ்ரத் றஹிமி, 20 பொதுமக்களும் காயமடைந்ததாகக் கூறியுள்ளார்.

இதுதவிர, பக்லன் பொலிஸ் தலமையகம் மீதான தாக்குதலானது, தற்கொலைக் குண்டுதாரி உட்பட ஒன்பது தாக்குதலாளிகள் கொல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்ததாக நஸ்ரத் றஹிமி மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு தலிபான் உரிமை கோரியிருந்தது.

இந்நிலையில், குண்டுவெடிப்பால் கொல்லப்பட்டவர்களுள் சிறுவர்களும், பெண்களும் உள்ளடங்குவதாக புல்-ஈ-குஹும்ரியிலுள்ள மாகாண உதவி சுகாதாரப் பணிப்பாளர் அப்துல் அலீம் கஃபாரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளுடன் ஆறாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகளை தலிபான் மேற்கொண்டு வருகின்றபோதும் பாதுகாப்பு மையங்கள் மீதான தாக்குதல்களை அவர்கள் அதிகரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X