2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலிஸ் வாகன தாக்குதலில் 11 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பொலிஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட்டுகளால் தாக்கியதில், 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமுற்றனர்.

பாகிஸ்தானில் லாகூரிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரஹீம் கான் என்ற இடத்தில் இரண்டு பொலிஸ் வாகனங்கள் சேறும், சகதியுமான சாலையில் சிக்கி கொண்டன. அப்போது அந்த பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் சென்ற ஒரு கும்பல், பொலிஸ் வாகனம் மீது ரொக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில், 11 பொலிஸார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமுற்றனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு பிறகு, அந்த கும்பல் தப்பியோடினர். தப்பிய கும்பல், பொலிஸாரில் சிலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் கொள்ளையர்களா, ஏதேனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களா என்ற விவரம் வெளியாகவில்லை.

பாகிஸ்தானில் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவை, அவ்வப்போது பொலிஸ், இராணுவத்தை தாக்குவதும், பிணைக்கைதிகளாக பிடிப்பதும் வழக்கம். பிணைக்கைதிகளை மீட்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் உத்தரவிட்டார்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X