Editorial / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் சிறைத்துறை பஸ்சில் பொலிஸார், கைதிகள் உள்பட 13 பேர் பயணித்தனர். அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, 6 பொலிஸ் காரர்களுடன் வந்தகொண்டிருந்த பொலிஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 14 பொலிஸார் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சனிக்கிழமை (30) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 minute ago
37 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
43 minute ago
48 minute ago