2025 நவம்பர் 05, புதன்கிழமை

போகோ ஹராமினது எனச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான பொர்னோவில், இறுதிச் சடங்கொன்றில் போகோ ஹராம் ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில், ஆரம்ப எண்ணிக்கையை விட ஏறத்தாழ 3 மடங்காக, குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அரசாங்கத்தின் தலைவர் முஹம்மட் புலாமா தெரிவித்துள்ளார்.

பொர்னோவின் தலைநகரான மைடுகுரிக்கு நெருக்கமாகவுள்ள கிராமத்தில் துப்பாக்கிதாரிகளால் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, டசின் கணக்கான சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த கிராமத்தை போகோ ஹராம் ஆயுததாரிகள் அணுகியபோது, கிராமத்தவர்களால் 2 வாரங்களுக்கு முன்பாக போகோ ஹராமின் ஆயுததாரிகள் 11 பேர் கொல்லப்பட்டதற்கான பதில் தாக்குதலாக மேற்குறித்த தாக்குதல் இருக்கலாம் என தான் நினைப்பதாக முஹம்மட் புலாமா தெரிவித்துள்ளார்.

முன்னைய தாக்குதலை கிராமத்தவர்கள் தடுத்ததாகவும், போகோ ஹராமின் ஆயுததாரிகள் 11 பேரைக் கொன்றதாகவும், மோதலில் 10 ஏ.கே-47 றைபிள்களை மீட்டதாக முஹம்மட் புலாமா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.40 மணியளவில் பதில் தாக்குதல் நடவடிக்கையொன்றில் வந்த போகோ ஹராம் ஆயுததாரிகள், அப்பகுதியிலிருந்த புதைகுழியொன்றிலிருந்தவர்களைத் தாக்கியதாக முஹம்மட் புலாமா கூறியுள்ளார்.

இதேவேளை, போகோ ஹராமுக்கெதிரான உள்ளூர் ஆயுதக்குழுவின் தலைவரான புனு புகார் முஸ்தபாவும் மேற்கூறப்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியபோதும், இறுதிச் சடங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, 23 பேர் கொல்லப்பட்டதாகவும், மிகுதி 42 பேரும் பயங்கரவாதிகளைத் துரத்திச் சென்றபோது கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X