Mithuna / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதன்படி, மேசை ஒன்றின் முனை பகுதியில் போத்தல்களை இறுக பிடித்து கொண்டு திறமையாக, அதன் மூடிகளை அவருடைய தலையால் விரைவாக முட்டி, நீக்குகிறார்.
போத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக அவருடைய உதவியாளர்கள் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். அதிவேகத்தில் இந்த பாட்டிலின் மூடிகளை நீக்கும் செயலை தலையால் செய்து ரஷீத் சாதனை படைத்திருக்கிறார்.
அவர் மொத்தம் 77 போத்தல் மூடிகளை ஒரு நிமிடத்தில் நீக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பெப்ரவரியில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். எனினும், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிரப்பட்ட உடன் 17 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர். பலரும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய தற்காப்பு கலை நிபுணரான பிரபாகர் ரெட்டி என்பவர், ஒரு நிமிடத்தில் 68 போத்தல் மூடிகளை நீக்கியதே அப்போது சாதனையாக இருந்தது.
4 minute ago
13 minute ago
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
23 minute ago
2 hours ago