2025 ஜூலை 02, புதன்கிழமை

’போரைத் தொடர இந்தியா விரும்பவில்லை’

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா தற்போதுள்ள சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடர்வதற்கு விரும்பவில்லையென, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடரும் நிகழ்வுகள் பெரும் கவலையளிப்பதாகவும் ஆகையால், இரு நாடுகளிலும்  நிலவும் பதற்றத்தைத் தணிக்க, இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமெனவும், உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுஷ்மா சுவராஜ், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது பற்றி தொடர்ந்து கூறியுள்ள அவர், தாம், பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீதே வான் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், தொடர்ந்து போரிடுவதைத் தாம் விரும்பவில்லை என்பதால், இவ்விடயத்தில் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயற்படுவோமென, மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .