2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”

Mithuna   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந் நிலையில், 41 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் மத்திய கிழக்கில் நடத்திய தாக்குதல் மற்றும் அதன் பிறகு அங்கு நடைபெறும் சம்பவங்களால் மனித குலம் எதிர்கொள்ளும் இழப்புகளை கண்டு பெரிதும் வருந்துகிறேன். இதில் பலர் கொல்லப்பட்டு விட்டனர்.

நான், மற்றவர்களை போன்றே, இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. உதவிகள் அதிவேகமாக சென்றடைய வேண்டியதும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X