Mithuna / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.
இடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை தொடர்ந்தது.
இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்கவும், மீண்டும் போர்நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஹமாஸ் அமைப்பினர் நிரந்தர போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது.
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago