2025 மே 05, திங்கட்கிழமை

மகளை ஜனாதிபதியாக்க கிம்ஜோங் உன் திட்டம்?

Freelancer   / 2024 ஜூலை 30 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன் மகளை வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன். 2011இல் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்ட அவர், தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்

இந்நிலையில் தென் கொரியாவின் உளவு நிறுவனம், வடகொரியாவின் அரசியல் சூழல் குறித்து யூன்ஹாப் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள இரகசிய தகவலில் கூறியுள்ளதாவது,

“வடகொரிய ஜனாதிபதி கிம்ஜோங் உன் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தன் 12 வயது மகள் ஜூ ஏ என்பவரை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக்கிட திட்டமிட்டு இப்போது பயிற்சி அளித்து வருகிறார். பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X