2025 நவம்பர் 05, புதன்கிழமை

மக்கள் கூட்டத்துக்குள் லொறி புகுந்ததில் உடல் நசுங்கி 30 பேர் பலி

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமெரிக்காவின் நாடான கவுதமாலா நகராட்சி அலுவலகத்துக்கு அருகில், மக்கள் கூட்டத்துக்குள் லொறியொன்று புகுந்த​ததையடுத்து, அங்கிருந்த 30 பேர், லொறியில் நசுங்கி பலியாகினர். இந்த விபத்தையடுத்த, 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கவுதமாவாவிலுள்ள நகுவாலா பகுதியில், நேற்று முன்தினம் (27) இரவு, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த லொறியொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, மக்கள் கூட்டத்துக்குள் புகுந்துள்ளது. இதன்போது, உடல் நசுங்கி பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸாரும் தீயணைப்புப் படை வீரர்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 30 பேர் சடமாக மீட்கப்பட்டனர். அதில் படுகாயமடைந்த 17 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். அவர்களுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தக் கோரச் சம்பவம் குறித்து தான் வருந்துவதாகவும் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் அவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கவுதமாலாவின் ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ், தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்துக்கு, 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, கவுதமாலா அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X