Editorial / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையில், 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் வெற்றிடமாக இருந்துவருகிறது. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு, கடந்த 18ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு, மே மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல், இன்றுடன் நிறைவடைகின்றது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், 4 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன் ராஜ், ஒட்டப்பிடாரத்தில் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago