2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவரும் ‘எலி வைன்‘

Ilango Bharathy   / 2022 நவம்பர் 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் எலிக் குஞ்சுகளை  வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ‘மைஸ் வைன்‘( MiceMice) அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிறந்து 3 நாட்களே ஆன  எலிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இவ் வைனில் பலவிதமான சத்துகள் இருப்பதாக சீனர்கள் நம்புகின்றனர்.

‘எலிக் குஞ்சுகளை போத்தல் ஒன்றில் போட்டு, அதன் மீது அரிசி வைனை ஊற்றி அப்போத்தலை 12 மாதங்களுக்குத்  திறக்காமல் வைத்து, பின்னர் அவற்றைக் காய்ச்சுவதன் மூலம்  குறித்த வைன் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைனை பருகிவிட்டு அதிலிருக்கும் எலிகளையும் சீனர்கள் விரும்பி உண்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சீனாவில் தோன்றிய இப்பழக்கம் கொரியா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X