2025 மே 16, வெள்ளிக்கிழமை

மக்ரோனுடன் கைகோர்த்த எலோன் மஸ்க்

Ilango Bharathy   / 2023 மே 16 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk) பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோனை பாரிசில் சந்தித்து முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரான்சில் தொழில்களுக்கு முதலீடு செய்வதை ஊக்குவிக்க அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரோன் சிறப்பு மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

 இதன் ஒரு பகுதியாக எலோன் மஸ்க்கை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஒருமணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் நேர்மையான அணுகுமுறையுடன் இருவரும் பேச்சுநடத்தியதாகவும், மிகவும் வெளிப்படையா இருந்ததாகவும் பிரானஸ் நிதியமைச்சர்  தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .