Editorial / 2018 மே 31 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் சஞ்சிகையொன்றுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வழங்கிய ஆதரவைத் தொடர்ந்து, அவர் மீதான கடுமையான விமர்சனங்களை, துருக்கி முன்வைத்துள்ளது.
பிரான்ஸின் பிரபலமான சஞ்சிகைகளுள் ஒன்றான “லே பொய்ன்ட்”, துருக்கி ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவானை, “சர்வாதிகாரி” என அண்மையில் வர்ணித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸின் அவிக்னொன் நகரத்துக்குச் சென்ற ஜனாதிபதி ஏர்டோவானின் ஆதரவாளர்கள், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அச்சஞ்சிகையின் பிரதிகளை அகற்ற முற்பட்டதுடன், அச்சஞ்சிகைக்கான விளம்பரங்களையும் நிறுத்த முயன்றனர்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஏர்டோவானின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை, ஜனாதிபதி மக்ரோன் கண்டித்ததோடு, கருத்துச் சுதந்திரத்தையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மக்ரோனுக்கு, துருக்கி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு, தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025