Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸைத் தாக்கிய மங்குட் சூறாவளி காரணமாக, அந்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், 50ஐ விட அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி, மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகள், பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர் என, உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில், இன்னமும் மீட்புப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், பாதிப்புகள் மேலும் அதிகமாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. உள்ளூர் ஊடக அறிக்கைகளின் படி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 100ஐ அதிகரிக்குமெனக் கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸைத் தாக்கிய மங்குட், அதன் பின்னர் சீனாவையும் ஹொங் கொங்கையும் தாக்கியிருந்தது. அதன் அழிவு விவரங்கள், தொடர்ந்தும் வெளிவந்த வண்ணமுள்ளன.
ஹொங் கொங்கில், பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதோடு, பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 200 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என, மேலும் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வழிவுகள் தவிர, பிலிப்பைன்ஸின் அரிசிக் கையிருப்புக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சூறாவளி காரணமாக, 250,730 தொன் அரிசியை, இவ்வனர்த்தத்தில் இழந்துள்ளதாக, பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. இது, ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட அளவை விட, மிக அதிகமாகவும். இச்சூறாவளி காரணமாக, பிலிப்பைன்ஸுக்கு ஏற்படக்கூடிய மிக அதிகமான மோசமான அழிவாகக் கருதப்பட்ட அரிசி இழப்பை விட, 60 சதவீதம் அதிக அழிவு ஏற்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago