Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவைக் கொலை செய்வதற்கான திட்டமொன்றை முறியடித்ததாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலாக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகள், படைவீரர்களைக் கொண்ட வலையமைப்பொன்றானது முக்கியமான அரசாங்கக் கட்டடத்தை குண்டு வைத்து தகர்க்கவும், வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸின் வான் தளமொன்றைக் கைப்பற்றவும், வெனிசுவேலாவின் மத்திய வங்கியைக் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டதாகவும் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவின் பேச்சாளர் ஜோர்ஜ் றொட்றிகாஸ், வெனிசுவேலாவின் அரச தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, வெனிசுவேலா தேசிய சபையின் சபாநாயகர் குவான் குவைடோவை வெனிசுவேலாவின் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற குறித்த நபர்கள் விரும்புவதாகவும் ஜோர்ஜ் றொட்றிகாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது சிறையிலுள்ள வெனிசுவேலாவின் முன்னாள் பாதுகாப்பமைச்சர் றாவுல் படுவேலை விடுவித்து அவரை ஜனாதிபதியாக பதவியிலமர்த்த குறித்த வலையமைப்பானது ஹெலிகொப்டரொன்றை திருட விரும்பியதாகவும் ஜோர்ஜ் றொட்றிகாஸ் தெரிவித்திருந்தார்.
கடந்தாண்டுகளாக பல சதித் திட்டங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள வெனிசுவேலா அரசாங்கமானது, பொதுவாக தனது குற்றச்சாட்டுகளுக்கான குறுகிய அல்லது எதுவித ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கான எதிர்ப்பை அடக்குவதை நியாயப்படுத்துவதற்காகவே இவ்வாறான திட்டங்கள் இடம்பெறுவதாக ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தெரிவிப்பதாக எதிரணி குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட திட்டத்தையும் நிராகரித்த குவான் குவைடோ, வெனிசுவேலாவின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்புவதற்கான வெனிசுவேலா அரசாங்கத்தின் இன்னொரு முயற்சி எனக் கூறியுல்ளார்.
வெளி இராணுவக் கொண்டாட்டமொன்றின்போது ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு அருகில், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் இரண்டு கடந்தாண்டு ஓகஸ்டில் வெடிக்கவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago