Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து நாட்டின் செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்தவர் நிகோலஸ் மெட்சன் (வயது 28). இவரது மனைவி ஹொலி பிரம்லி (வயது 26). இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. செல்லப்பிராணிகள் மீது மிகுந்த வெறுப்பு கொண்டுள்ள நிகோலஸ் தனது மனைவி வளர்த்த செல்லப்பிராணிகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹொலி வளர்த்த செல்லப்பிராணி வெள்ளெலிகளை மிக்சியில் அரைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொடூரமாக கொன்றுள்ளார். அதேபோல், செல்லப்பிராணி நாயை துணிதுவைக்கும் எந்திரத்தில் வைத்து அரைத்து கொடூரமாக கொன்றுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், திருமணமாகி 16 மாதங்களாக மனைவி ஹொலியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அனுப்பாமல் நிகோலஸ் துன்புறுத்தியுள்ளார். அதேவேளை, தனது மகளை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ளமுடியவில்லை என்று ஹொலியின் பெற்றோர் கடந்த ஆண்டு மார்ச் 18ம் திகதி பொலிஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் நடத்திய விசாரணைகளின் போதே விபரம் அம்பலமானது.

22 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago