Freelancer / 2023 ஜூலை 10 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொன்று மூளையை உணவுடன் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த 32 வயதான அல்வோரோ என்பவர், பேய், பிசாசு மீது நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது.
அதாவது, கணவர் அல்வாரோ மற்றும் பாதிக்கப்பட்ட மரியா மான்செராட் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அல்வாரோ ஏற்கனவே திருமணம் ஆனவர். முன்னாள் மனைவியுடன் ஐந்து மகள்கள் உள்ளனராம்.
இந்நிலையில், அல்வாரோ கடந்த வாரம் சாத்தான் உத்தரவிட்டதாக கூறி, தனது மனைவியை கொன்று அவரது மூளையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவரது மண்டை ஓட்டை சாம்பலாகப் பயன்படுத்தியதாகவும் அதோடு, உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசியதும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் கொலை செய்த போது, போதையில் இருந்ததாக கூறுகின்றனர்.
மேலும் அந்த விசாரணையில், ஆல்வாரோ பேய் தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரது வீட்டிலும் சூனியம் தொடர்பான சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இறுதியில் போதைப்பொருள் பழக்கத்தால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
39 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
1 hours ago